சாராயம் குடித்து உடல் நலம் பாதிக்கப்பட்ட நபர் உயிரிழப்பு

இந்தியாவில் விழுப்புரம் அருகே சாராயம் குடித்ததால் உடல் நலம் பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபர் சிகிச்சை பலன் இன்றி இன்று வியாழக்கிழமை அதிகாலை உயிரிழந்துள்ளார்.

டி குமாரமங்கலத்தை சேர்ந்த ஜெயராமன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் கடந்த சனிக்கிழமை சாராயம் குடித்த பிறகு வயிற்றில் எரிச்சல் ஏற்பட்டதால் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந் நிலையில் சிகிச்சை பலன் இன்றி இன்று உயிரிழந்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்