குதிரை பற்றி 10 வரிகள்

குதிரை பற்றி 10 வரிகள்

குதிரை பற்றி 10 வரிகள்

🟤⚫பொதுவாக ஒரு மனிதனின் வேகம் மற்றும் துடிப்பிற்கு உதாரணமாக கூறப்படும் விலங்கு தான் குதிரைகள். அப்படி வேகம் மற்றும் துடிப்பிற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக கூறப்படும் குதிரை பற்றிய தகவல்களை நாம் இப்பதிவில் தெரிந்துகொள்வோம்.

🐴கி.மு. 4000 ஆண்டுகளுக்கு முன்பே, குதிரைகள் மனிதனால் பழக்கப்படுத்தப்பட்ட விலங்கு. மனிதனின் போக்குவரத்துக்கும், மேற்குலக நாடுகளில் ஏர் உழுவதற்கும், இருபதாம் நூற்றாண்டு வரை குதிரை, உதவியாக இருந்தது. பண்டைய அரசுகளின் படைகளில் குதிரைப்படை இன்றியமையாத ஒன்றாகும். குதிரைகளைக் கொண்டு பந்தயங்களும் நடத்தப்படுகின்றன.

🐴குதிரையின் பிறப்பிடம் வட அமெரிக்கா ஆகும். அதன் பின்னர் ஆசியா மற்றும் ஐரோப்பா முழுவதும் பரவியது.

🐴குதிரைகளின் பருவத்திற்கு ஏற்ப ஃபோல் (Foal) அல்லது குட்டிக்குதிரை, யார்லிங் (Yearling), கோல்ட் (Colt), ஃபில்லி(Filly), மேர்(Mare), பொலிக்குதிரை (Stallion), கேல்டிங் (Gelding) என அழைக்கப்படும்.

🐴குதிரைகள் பொதுவாக 25 முதல் 30 ஆண்டுகள் ஆயுள் காலத்தைக் கொண்டுள்ளது.

🐴குதிரைகளின் கருக்காலம் 335 முதல் 340 நாட்கள் ஆகும். குதிரைக் குட்டிகள் பிறந்த சிறிது நேரத்திலேயே எழுந்து நடக்க ஆரம்பித்து விடும். ஐந்து ஆண்டுகளில் இனப்பெருக்கத்திற்குத் தயாராகின்றன.

🐴கறுப்பு, வெள்ளை, சாம்பல், சிகப்பு கலந்த பழுப்பு நிறம் மற்றும் இரு நிறங்கள் ஒரே குதிரையில் கலந்தும் காணப்படுகின்றன. அதிகபட்ச வேகம், குதிரையின் முக்கிய குணங்களில் ஒன்று. 88கிமீ வேகத்தில் ஓடும்.

🐴குதிரைகளால் நின்றுகொண்டும் படுத்துக் கொண்டும் தூங்க இயலும். குதிரைகளின் கால்களில் உள்ள சிறப்பான ஒரு அமைப்பின் காரணமாக அவற்றால் விழாமல் நின்று கொண்டே தூங்க முடியும். ஒரு குதிரையானது சராசரியாக ஒரு நாளைக்கு 2.9 மணி நேரம் தூங்குகிறது.

🐴நன்கு வளர்ந்த 450 கிலோ எடையுள்ள ஒரு குதிரை ஒரு நாளில் 7 இலிருந்து 11 கிலோ உணவைத் தின்னும். மேலும் 38-இல் இருந்து 45 லிட்டர் வரை நீர் அருந்தும். முக்கியமான விஷயம் என்னவென்றால், குதிரைகளால் வாந்தி எடுக்க இயலாது. இதனால் ஏதேனும் நச்சுப்பொருட்களை சாப்பிட்டால் அது குதிரையின் இறப்புக்குக் காரணமாக நேரிடும்.

🐴குதிரைகள் சிறப்பான பார்வைத்திறனைக் கொண்டது. இரு கண்களால் 65 பாகை வரையும் ஒற்றைக் கண் பார்வையில் 350 பாகைக்கு மேலும் பார்க்கவியலும். இவற்றால் பகலிலும் இரவிலும் நன்கு பார்க்க முடியும். எனினும் குதிரைகளுக்கு நிறக்குருடு இருப்பதால் இரு நிறங்கள் மட்டுமே தெரியும்.

🐴குதிரையின் உடலில் சராசரியாக 205 எலும்புகள் உள்ளன. மனிதனுக்கும் இவற்றுக்கும் உள்ள ஒரு வேறுபாடு என்னவென்றால் குதிரைகளுக்கு காறையெலும்பு இல்லை என்பது மட்டும்தான்.

குதிரை பற்றி 10 வரிகள்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்