கர்ப்பிணி மனைவிக்கு எழுந்த சந்தேகம்: பொலிஸாரிடம் சிக்கி கொண்ட கணவன்
வவுனியா பிரதேசத்தில் கணவன் தாமதமாக வீட்டுக்கு வருவதால் சந்தேகமடைந்த மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்ததால், பாடசாலை மாணவி வன்புணரப்பட்ட சம்பவம் தெரிய வந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
27 வயதான கணவன், அண்மைக்காலமாக கர்ப்பிணியான தன்னையும் பிள்ளையையும் தவிர்த்துவிட்டு நள்ளிரவு 12 மணிக்குப் பின்னரே கணவர் வீட்டுக்கு வருவதாக குறிப்பிட்டு, பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார்.
இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் கணவர் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்ட போது பாடசாலை மாணவி துஸ்பிரயோகம் செய்யப்பட்ட விபரம் வெளிச்சத்துக்கு வந்தது.
மேலும் சந்தேகநபர் சென்றுவரும் வீட்டிலிருந்த தாயையும், மகளையும் பொலிசார் விசாரணைக்குட்படுத்திய போது, இரவு நேரத்தில் இரகசியமாக வீட்டுக்குள் நுழைந்து, மாணவியை வன்புணர்வுக்குள்ளாக்கியதும், இருவரும் காதலித்து வந்ததும் தெரிய வந்துள்ளது.
சந்தேக நபரான கணவர் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.