கருவளையம் நீங்க பாட்டி வைத்தியம்
கருவளையம் நீங்க பாட்டி வைத்தியம்
கருவளையம் நீங்க பாட்டி வைத்தியம்
📌கருவளையம் பிரச்சனையானது ஆண்கள் பெண்கள் என இருவருக்கும் பாரபட்சம் இல்லாமல் வருகிறது. அதற்கு முக்கிய காரணமாக இருப்பது போன் மற்றும் கணினி, என இரண்டும் தான் அதிகளவு பாதிக்க காரணமாக உள்ளது. காரணம் கணினி, போன் முன் அதனை பார்ப்பதால் அவர்களுக்கு பிரச்சனை வருகிறது. கணினி என்றால் அதிகளவு பயன்படுத்துவது பெண்கள் தான் அதனால் அவர்களுக்கு அதிகம் இந்த பிரச்சனை வருகிறது. அதேபோல் சிறிது நேரம் தூங்குவது, கண்களுக்கு கொடுக்கப்படும் வேலை, உடலில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் இந்த கருவளையம் வரும். அதனால் அதனை மறைக்க பெண்கள் கிரீம்களை தான் பயன்படுத்தி மறைந்துவிடுவார்கள். இதனை செய்து முகத்தை பின்பு பாதிக்கப்படுவதற்கு இப்போதே வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து இயற்கை முறையில் எவ்வாறு செய்யலாம் என்பதைப் பார்ப்போம்.
◼அதேபோல் கண்களுக்கு அதிகம் வேலைகொடுக்க கூடாது. ஏதேனும் புத்தகம் படித்தால் அதனை உற்று கவனித்து படித்தால் அது கண்களுக்கு சோர்வை கொடுக்கும். ஆகையால் முடிந்தளவு கண்களை அதிகம் வேலைகொடுக்காமல் பார்த்துக்கொள்வது நல்லது.
◼அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும். ஏனென்றால் உடலுக்கு தேவையான முக்கியமான பொருட்களில் தண்ணீர் முக்கியமானது அதனை சரியாக உடலுக்கு சேர்ப்பது நல்லது.
◼தினமும் 7 முதல் 8 மணிநேரம் நன்றாக தூங்குங்கள். இதனால் கருவளையம் வருவதை எளிமையாக தவிர்க்கலாம்.
◼புதினா இலையை மசித்து அதில் வரும் சாறை கண்களுக்கு கீழ் தடவி 10 அல்லது 15 நிமிடம் காயவைத்து கழுவி வருவதால் முகத்தில் இருக்கும் கருவளையங்கள் மறையும்.
◼தக்காளி சாறை 2 ஸ்பூன் எடுத்து அந்த சாற்றில் சிறிது எலுமிச்சை சாற்றை கரைத்து முகத்தில் கண்களுக்கு கீழ் தடவி வர கருவளையம் மறையும்.
◼வெள்ளரிக்காயை சிறிய துண்டாக வட்ட வடிவில் நறுக்கி அதனை கண்களுக்கு மேல் வைத்து வர உடல் குளிர்ச்சி அடைந்து கண்களில் இருக்கும் கருவளையம் நீங்கும்.
◼உருளைக்கிழங்கள் எடுத்து அதனை கண்களுக்கு கீழ் தடவி வர கண்களில் ஏற்பட்டிருந்த கருப்பு குறையும்.
◼தேங்காய் எண்ணெயில் மஞ்சள் குழைத்து, தினமும் கண்களை சுற்றி பூசி 10 நிமிடம் கழித்து குளித்தால் கருவளையம் குறையும்.
◼சோற்றுக் கற்றாழை ஜெல் தடவி வரலாம். இதில் உள்ள சத்துக்கள் கண்களை சுற்றி உள்ள சருமத்திற்கு ஊட்டம் அளிக்கிறது.
◼அன்றாட உணவில் நார்ச்சத்து நிறைந்த உணவுகளைச் சேர்க்கவும். இதனால், உங்கள் சருமம் பொலிவாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.
கருவளையம் நீங்க பாட்டி வைத்தியம்
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்