![](https://minnal24.com/wp-content/uploads/2025/01/Pettah-floating-market.jpg)
கடந்த 24 மணித்தியாலங்களில் நீர்நிலைகளில் இருந்து 3 சடலங்கள் மீட்பு!
இன்று வியாழக்கிழமை காலை 06.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில், இருவேறு பகுதிகளில் இருந்து அடையாளம் தெரியாத மூன்று சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
கொழும்பு, பெட்டாவில் மிதக்கும் சந்தைக்கு அருகில் உள்ள ஏரியில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சடலம் இன்று காலை கண்டெடுக்கப்பட்ட நிலையில், மருதானை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, கிளிநொச்சி ஏ-35 பிரதான வீதியில் உள்ள, புளியம்பொக்கன பாலத்திற்கு அருகில் இரண்டு ஆண்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
பாலத்திற்கு அருகில் உள்ள ஆற்றில் சடலங்கள் மிதந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.