ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை செய்த மோசமான செயல்

கண்டி மற்றும் கம்பளை மாவட்டத்தில் அமைந்துள்ள இரண்டு அரச வங்கிக் கிளைகளில் பண மோசடியில் ஈடபட்ட பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹிந்தகலை பிரதேசத்தைச் சேர்ந்த 69 வயதுடைய ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியையே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடரபில் மேலும் தெரிய வருகையில்,

அரச வங்கியினால் அறிமுகப்படுத்தப்பட்ட குருசெத கடன் திட்டத்தின் கீழ் கண்டி மற்றும் கம்பளை மாவட்டத்தில் அமைந்துள்ள இரண்டு அரச வங்கிக் கிளைகளிலிருந்து 26 போலி ஆவணங்கள் தயாரித்து 42 மில்லியன் 55 ஆயிரம் ரூபாய் பண மோசடி செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்