எடை குறைவான பாண்: 305 பேக்கரிகளுக்கு சட்ட நடவடிக்கை

எடை குறைவான பாணை விற்பனை செய்த 305 பேக்கரிகள் மற்றும் கடைகளுக்கு எதிராக அளவீடு, தரநிலைகள் மற்றும் சேவைகள் திணைக்களம் சட்ட நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் 994 பேக்கரிகள் மற்றும் கடைகள் சோதனை செய்யப்பட்டு அவற்றில் 190 பேக்கரிகள் மற்றும் 115 கடைகள் அடையாளம் காணப்பட்டன.

அதன்படி கொழும்பில் 34 பேக்கரிகளும் 24 கடைகளும் கண்டுபிடிக்கப்பட்டன. இந்நிலையில் மக்களை ஏமாற்றி , குறைந்த எடை கொண்ட பாண்களை விற்பனை செய்த பல பேக்கரிகள் மற்றும் கடைகள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

 

Minnal 24FM Logo Minnal24 FM
LIVE
மட்டக்களப்பில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலி மின்னல் 24