இலங்கையின் முதலாவது பெண் செய்தி வாசிப்பாளர் காலமானார்

இலங்கையின் முதல் தொலைக்காட்சி செய்தி தொகுப்பாளரான சிரேஷ்ட ஊடகவியலாளர் சுமனா நெல்லம்பிட்டிய காலமானார்.

நீண்ட நாட்களாக உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் தனது 80 ஆவது வயதில் உயிரிழந்துள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

சுமனா நெல்லம்பிட்டிய 1962ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் திகதி வானொலி நிலையத்தில் உதவி அறிவிப்பாளராக இணைந்துகொண்டார்.

இலங்கை தொலைக்காட்சி வரலாற்றில் முதல் பெண் செய்தி வாசிப்பாளரான சுமனா நெல்லம்பிட்டிய தனது ஊடக வாழ்க்கையை ஆரம்பிக்கும் முன்னர் விமானப்படை அதிகாரியாக கடமையாற்றியிருந்தார்.

இவர் சுயாதீன தொலைக்காட்சி மற்றும் தேசிய தொலைக்காட்சியில் முதல் செய்தி தொகுப்பாளராகவும் பணியாற்றியிருந்தார்.

இந்நிலையில் அவரின் மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்