இரண்டு சிறுவர்கள் சடலமாக மீட்பு
இந்தியாவில் திருப்பூர் பிரதேசத்தில் இரண்டு சிறுவர்கள் குட்டையிலிருந்து சடலமாக மீட்கப்பட்டனர்.
பண்ணைக்கிணறு பகுதியைச் சேர்ந்த மிதன்ராஜ் ( வயது 11 ) மற்றும் வினோத் ( வயது 12 ) ஆகிய சிறுவர்களே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டனர்.
உயிரிழந்த சிறுவர்கள் கடந்த 28ஆம் திகதி விளையாடச் சென்று நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால், அவர்களுடைய பெற்றோர் குடிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
நேற்று வியாழக்கிழமை காலை பீக்கல்பட்டி பகுதியில் உள்ள குட்டையில் குறித்த சிறுவர்கள் சடலமாக மீட்கப்பட்டனர்.
மேலும் இச் சம்பவம் குளிக்கச் சென்றபோது இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்