ஆனையிறவு உப்பளம் தொழிலாளர்கள் இன்று போராட்டம்

கிளிநொச்சி ஆனையிறவு உப்பளத்தில் பணியாற்றுகின்ற தொழிலாளர்கள் இன்று புதன் கிழமை பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

போராட்டத்தின் போது உப்பளத்தின் முகாமைக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களை நேரில் சென்று சந்தித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் தொழிலாளர்களின் பிரதிநிதிகள் மற்றும் பொலிஸாருடன் சென்று உப்பள முகாமையாளரை சந்தித்து உரையாடிய அவர் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது உப்பள தொழிலாளர்களின்
நியாயமான கோரிக்கைகள் தொடர்பில் உரிய மட்டத்தின் கவனத்திற்கு விடயத்தை
கொண்டு செல்வேன் எனத் தெரிவித்தார்.