Sri Lanka Tamil News Site

விறகு எடுக்க சென்றவர் சடலமாக மீட்பு

- Advertisement -

-திருகோணமலை நிருபர்-

திருகோணமலை-லிங்கநகர் அம்மன் கோயில் காட்டுப் பகுதியில் வயோதிபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த முதியவர் கடந்த 30 ஆம் திகதி விறகு எடுப்பதற்காக காட்டுப் பகுதிக்கு சென்றுள்ளார்.

எனினும் அவர் வீடு திரும்பாத நிலையில் அக்காட்டு பகுதியை சோதனையிட்டபோது அவருடைய சடலம் துறைமுக அதிகார சபைக்குச் சொந்தமான கடற்கரை பகுதியில் நேற்று வியாழக்கிழமை மாலை மீட்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

- Advertisement -

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் திருகோணமலை லிங்கநகர் முருகன் கோயில் 25 ஆவது ஒழுங்கையில் வசித்து வரும் மூன்று பிள்ளைகளின் தந்தையான நாகரட்ணம் நடேசபிள்ளை (79 வயது) பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலை நகர சபையில் கடமையாற்றி ஓய்வு பெற்றவர் எனவும், அவருடைய சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மரணம் தொடர்பில் திருகோணமலை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

விறகு எடுக்க சென்றவர் சடலமாக மீட்பு

- Advertisement -