ஜனசக்தி குழுமத்தின் தலைவர் தினேஷ் ஷாப்டர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வர்ணனையாளர் பிரையன் தோமஸுக்கு வெளிநாட்டு பயணத் தடையை கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவெல நேற்று வெள்ளிக்கிழமை விதித்தார்.
முன்னாள் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரையன் தோமஸிடம் இரண்டு கடவுச்சீட்டுகள் இருப்பதாகவும், இந்த இரண்டு கடவுச்சீட்டுகளுக்கும் வெளிநாட்டுப் பயணத் தடையை நீதிமன்றம் விதித்துள்ளது.
- Advertisement -
தினேஷ் ஷாப்டர் பயன்படுத்திய கையடக்கக் கருவியின் அழைப்பு தொடர்பான தொலைத்தொடர்பு பகுப்பாய்வு அறிக்கையை வழங்க தொலைத்தொடர்பு சேவை வழங்குனர்களுக்கு உத்தரவிடுமாறு பொரளை பொலிஸார் நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளனர்.
இதற்கு சேவை வழங்குநர்களிடமிருந்து பதிவைப் பெற நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நான்கு பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.
- Advertisement -