நீண்ட நாட்களாக நிலவி வந்த கடும் உஷ்ணமான காலநிலையை தொடர்ந்து திருகோணமலை மாவட்டத்தின் பல இடங்களில் மழை பெய்துள்ளது.
கடும் வெப்பமான கால நிலையின் பின் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நேரத்தில் மழை பெய்துள்ளது. தற்போது விவசாயிகள் நெற் செய்கைக்காக விதைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் நிலையில் மழை பெய்துள்ளது.
தம்பலகாமம், கிண்ணியா, கந்தளாய் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து, மேகம் மப்பும் மந்தாரமுமாக தொடர்ந்தும் காட்சியளிக்கிறது.
கடுமையான வெப்ப நிலை நிலவியதன் காரணமாக வரட்சியாக காணப்பட்ட நிலங்கள் குளிர்ச்சியடைந்துள்ளன.