இந்த வார எண் கணித பலன்கள்

நவம்பர் 07 ஆம் தேதி முதல் 13 தேதி வரை உங்கள் பிறந்த தேதி சார்ந்த எண் கணிதப் பலன்கள் என்னவென்று இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

இந்த வாரம் நீங்கள் பொறுமை மற்றும் நிதானத்தை கட்டாயம் கடைபிடிக்க வேண்டியிருக்கும். குறிப்பாக வாக்குவாதங்கள் அல்லது சண்டையிடுவதை தவிர்க்க வேண்டும். எந்த சிக்கலும் இல்லாமல் இந்த வாரத்தை நீங்கள் கடக்க வேண்டும் என்றால் அமைதி ஒன்றே வழி. தம்பதிகள் ஒருவர் மீது ஒருவர் பரஸ்பரம் நம்பிக்கை வைக்க வேண்டும். வெகுதூர பயணத்தை முடிந்தவரை தவிர்க்கவும். நாடக கலைஞர்கள், கிரிக்கெட் வீரர்கள், நடனக் கலைஞர்கள், பேட்டரி விற்பனையாளர்கள், எழுத்தாளர்கள், அரசு அதிகாரிகள், மருத்துவர்கள், இசைக்கலைஞர்களுக்கு இந்த வாரம் பண வரவு அதிகரிக்க கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் நீலம்

அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 9

நன்கொடைகள்: கோவிலில் தேங்காய் தானம் செய்யுங்கள்

#எண் 2 (நீங்கள் 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

நீங்கள் மிகவும் விரும்பியவரிடம் உங்கள் காதல் உணர்வுகளை மறைக்க வேண்டிய வாரம் இது. எனினும் தொழில் ரீதியாக புதிய விஷயங்களை தொடங்குவீர்கள். உங்கள் தனிப்பட்ட உறவை இயல்பாக கொண்டு செல்ல மன்னிக்கும் பண்பை வளர்த்து கொள்ளுங்கள். உங்களிடம் இருக்கும் சொத்தை விற்று புதிய வணிகத்தில் முதலீடு செய்ய திட்டமிட்டால் அது பலனளிக்கும். குறிப்பாக இந்த வாரம் உங்களது வெற்றியில் பெற்றோர்கள் முக்கியப்பங்கு வகிப்பார்கள். ஏற்கனவே இருக்கும் காதல் உறவுகள் செழிப்பாக இருக்கும். சிறிய பயணத்தைத் திட்டமிட கூடும்.

அதிர்ஷ்ட நிறம்: பிங்க்

அதிர்ஷ்ட நாள்: திங்கள்

அதிர்ஷ்ட எண்: 2

நன்கொடைகள்: கோவிலில் அன்னதானம் செய்யுங்கள்

#எண் 3 (நீங்கள் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

நீங்கள் நிர்ணயித்த இலக்குகளை அடைய அதிக அர்ப்பணிப்பு தேவை என்பதை மனதில் கொள்ளுங்கள். இந்த வாரம் உங்களது தொழில் வளர்ச்சியில் சில தாமதங்கள் ஏற்படலாம். தனிப்பட்ட வாழ்க்கையில் சில அவநம்பிக்கையை எதிர்கொள்ளலாம். வேலைகளில் அழுத்தத்தை சந்திக்க நேரிடலாம். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். குறிப்பாக பாடகர்கள், பயிற்சியாளர்கள், கல்வியாளர்கள், அரசியல்வாதிகள் மற்றும் வழக்கறிஞர்களுக்கு சாதகமான நாள். ஆடைகள், நகைகள், புதிய சொத்துக்கள் வாங்க இது சிறந்த வாரம்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் மஞ்சள்

அதிர்ஷ்ட நாள்: வியாழன்

அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 9

நன்கொடைகள்: கோவிலில் குங்குமப்பூ தானம் செய்யுங்கள்

#எண் 4 (நீங்கள் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

முந்தைய சில வாரங்களை ஒப்பிடும் போது இந்த வாரம் உங்களுக்கு சில ஆடம்பரம் மற்றும் வசதி வாய்ப்புகளை வழங்குகிறது. ஸ்டாக் மற்றும் கமர்ஷியல் சொத்துக்களில் முதலீடு செய்ய சாதகமான வாரம். இந்த வாரம் எடுக்கப்படும் நிதி தொடர்பான முக்கிய முடிவுகள் சிறப்பான பலன்களை பெறலாம். விற்பனை ஊழியர்கள், ஐடி ஊழியர்கள், நாடக கலைஞர்கள், நடிகர்கள், தொலைக்காட்சி தொகுப்பாளர்கள் மற்றும் நடனக் கலைஞர்கள் சிறப்பான பலன்களை பெறுவார்கள். நிலையான ஆரோக்கியத்தை பராமரிக்க இந்த வாரம் சீரான டயட்டை பின்பற்றுங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பர்பிள்

அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்

அதிர்ஷ்ட எண்: 9

நன்கொடைகள்: ஆசிரமத்தில் பழங்களை தானம் செய்யுங்கள்

#எண் 5 (நீங்கள் 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இந்த வாரம் உங்களுக்கு சற்று கடினமாகவே செல்லும். முக்கியமான சில விஷயங்களை நீங்கள் இழக்க நேரிடலாம். உங்களுக்கு நெருக்கமானவர்கள் மீது நம்பிக்கை வையுங்கள். நீண்ட காலமாக இருக்கும் சில சிக்கலான பிரச்சனைகளை தீர்க்க முனைவீர்கள். உங்களது காதல் உறவு சவால்களை சந்திக்கும். இந்த வாரம் உங்களுக்கான பணவரவு இயல்பாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

அதிர்ஷ்ட நாள்: புதன்

அதிர்ஷ்ட எண்: 5

நன்கொடைகள்: : விலங்குககளுக்கு தண்ணீர் வைக்கவும்

#எண் 6 (நீங்கள் 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

இந்த வாரம் நீங்கள் பலருக்கும் வழிகாட்டியாக இருந்து அவர்களது வாழ்வில் முக்கிய அங்கம் வகிப்பீர்கள். உங்களுக்கான மரியாதையை அதிகரிக்கும். பணவரவு சிறப்பாக இருக்கும். உங்களிடம் ஒப்படைக்க படும் குழுவை சிறப்பாக வழி நடத்துவீர்கள். உங்களது காதல் உறவு மிகவும் சக்தி வாய்ந்ததாக மாறும். விளையாட்டு வீரர்கள், சொத்து வியாபாரிகள், தோல் மருத்துவர்கள் பாடகர்கள், வடிவமைப்பாளர்கள், சமையல் நிபுணர்கள், தங்களது துறையில் வளர்ச்சியை பெறுவார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: அக்வா

அதிர்ஷ்ட நாள்: வெள்ளி

அதிர்ஷ்ட எண்: 6

நன்கொடைகள்: : ஆசிரமங்களில் இனிப்புகளை தானம் செய்யுங்கள்

#எண் 7 (நீங்கள் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

உங்களது திறமையை வெளிப்படுத்த இந்த வாரம் சிறப்பானதாக அமையும். நேர்காணல், போட்டித் தேர்வுகள் அல்லது ஆடிஷனில் கலந்து கொள்ள ஏற்ற வாரம். நகைக்கடையில் இருப்பவர்கள், வழக்கறிஞர்கள்,விமானிகள், அரசியல்வாதிகள், நாடக கலைஞர்கள், சி.ஏ., சாப்ட்வேர் துறைகளில் இருப்பவர்களுக்கு இந்த வாரம் சிறப்பு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

அதிர்ஷ்ட நாள்: திங்கள்

அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9

நன்கொடைகள்: சிறிய காப்பர் மெட்டல் பீஸ்களை தானம் செய்யுங்கள்

#எண் 8 ( நீங்கள் 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

காதலில் இருப்பவர்கள் திருமணம் பற்றிய திட்டங்களை செயல்படுத்த சிறப்பான வாரம் இது. காதல் திருமணம் கைகூடும் வாய்ப்புகள் அதிகம். வார நாட்களில் சிறிய யணங்கள் அல்லது பார்ட்டிகள் மூலம் உற்சாகமாக இருப்பீர்கள். வியாபாரிகள் முடிவுகளை எடுப்பதில் அவசரம் காட்டாமல் பொறுமையாக இருங்கள். சொத்து மற்றும் இயந்திரங்கள் வாங்குவது தொடர்பான முடிவுகள் சாதகமாக இருக்கும். உங்கள் மீதான நம்பகத்தன்மையை அதிகரிக்கும். பார்ட்னர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் பொறுமையாக இருங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: பர்பிள்

அதிர்ஷ்ட நாள்: வெள்ளி

அதிர்ஷ்ட எண்: 6

நன்கொடைகள்: ஆசிரமத்தில் உள்ளவர்களுக்கு தேவைப்படும் பொருட்களை தானம் செய்யவும்

#எண் 9 (நீங்கள் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர் என்றால்):

நீங்கள் இந்த வாரம் மிகவும் தனிமைப்படுத்தப்பட்டதை போல் உணர்வீர்கள். பிறருடன் உறவை பேண சிரமப்படுவீர்கள். செலவுகள் அதிகரிக்க கூடும். நீங்கள் காயமடையும் வாய்ப்புகள் உள்ளதால் வாகனத்தில் போகும் போது கவனமாக செல்லவும். வணிகத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காது. அரசியல்வாதிகள் பணம் தொடர்பான தடைகளை எதிர்கொள்ள கூடும். பயிற்சியாளர்கள், இசைக்கலைஞர்கள், எழுத்தாளர்கள், வடிவமைப்பாளர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், பொறியாளர்கள் மற்றும் நடிகர்கள் புதிய திட்டங்களில் முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

அதிர்ஷ்ட நாள்: செவ்வாய்

அதிர்ஷ்ட எண்: 9

நன்கொடைகள்: கோயிலில் குங்குமம் தானம் செய்யுங்கள்