மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய கலாச்சார இசை நிகழ்ச்சி

-கிண்ணியா நிருபர்-

சமூக சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய மட்ட இசைநிகழ்ச்சி மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் எஸ் .சுதாகரன் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது

முதற்கட்டமாக கிழக்கு மாகாண மட்ட போட்டிகள் திருகோணமலை மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் திருகோணமலை மட்டக்களப்பு ,அம்பாறை மாவட்டங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகள் சமூக சேவைகள திணைக்களத்தினால் வழங்கப்பட்ட தலைப்புகளுக்கு அமைவாக போட்டி நிகழ்ச்சிகளில் பங்கு பற்றினர்

இப்போட்டி நிகழ்வில் திருகோணமலை மாவட்டம் 1ம் இடத்தை பெற்றதுடன் தேசிய மட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளது

இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட இணைப்பாளர் ( சமூக சேவை) த. பிரணவன் கோ மரண்கடவெல உத்தியோகத்தர் அ செல்வகுமார் குச்சவெளி உத்தியோகத்தர் ம. குகதாசன் பட்டிணமும் சூழலும் உத்தியோகத்தர் கௌரிதாஸ் மற்றும் மட்டக்களப்பு மற்று மற்றும் அம்பாறை மாவட்டத்தின் இணைப்பாளர்களும் கலந்து கொண்டனர்