கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம்

கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இன்று சனிக்கிழமை விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

குறித்த விஜயத்தின் ஒரு அம்சமாக இன்று காலை 8.30 மணியளவில் அமைச்சர் மட்டக்களப்பு கல்லடியில் ஐஸ் தொழிற்சாலை அமைந்துள்ள இடத்திற்கு விஜயம் மேற்கொண்டு அங்குள்ள விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தினார்.

மேலும் இன்று பிற்பகல் 3.00 மணிக்கு மட்டக்களப்பு நகர் பகுதியில் அமைந்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அலுவலகத்தில் கட்சி உறுப்பினர்களுடன் சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது.