யாழில் 61 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

-யாழ் நிருபர்-
யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த ஒக்டோபர் மாதத்தில்  61 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட  பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின்   பொறுப்பதிகாரி ச.விஜிதரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் பாவனையாளர் அலுவல்கள்  அதிகார சபையினரின் களவிஜயத்தின் போது கடந்த ஒக்டோபர் மாதத்தில் 61 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஒக்டோபர் மாதம் 14 இலட்சத்து 51 ஆயிரம் ரூபா பணம்  வர்த்தகர்களிடம் தண்டப்பணமாக அறவிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
1.பொருட்களுக்கான சந்தை விலை யினை காட்சிப்படுத்தாமை
 2.குறிக்கப்பட்ட விலை  மற்றும் கட்டுப்பாட்டு விலையினைமீறிபொருட்களை விற்றமை
3.ஏமாற்றும் நோக்கோடு  பண்டத்தின் மீது பொறிக்கபட்ட விலையினை மாற்றி விற்பனை செய்தமை
4.நிறை குறைவாக பாண் விற்பனைசெய்தமை.உற்பத்தி செய்தமை
போன்ற குற்றச்சாட்டுகளுடன்  அதிகார சபையின் உத்தியோகத்தர்களின் கள விஜயத்தின் போது  பிடிபட்ட வர்த்தகர்களுக்கு   எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,
மேலே குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுடன் தொடர்பான  வியாபாரிகளுக்கு எதிராக தொடர்ச்சியாக சட்ட நடவடிக்கைகள்  முன்னெடுக்கப்படும்
 எனவே யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள மொத்த வியாபாரிகள் சில்லறைவியாபாரிகள் மிகவும் அவதானமாக தமது வியாபார செயற்பாட்டை பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு செயற்படுத்துமாறு யாழ். மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினர் அறிவித்துள்ளனர்.