ஓடும் ரயிலில் சாகச திருட்டு ; விதம் விதமாக திருடும் கும்பல்கள்

ஓடும் ரயிலில் ஓட ஓட எண்ணெய் திருடிய சம்பவமொன்று இந்தியாவில் இடம்பெற்றுள்ளது. குறித்த திருட்டு சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் பீகார் மாநிலத்தில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை, சரக்கு ரயில் பீகாரில் உள்ள ஹிந்துஸ்தான் பெற்ரோலியம் கோப்பரேஷன் லிமிடெட் (HPCL) எண்ணெய்க் கிடங்கிற்குச் சென்று கொண்டிருந்தது.

அப்போது திருட்டு கூட்டம், ரயில் இலக்கை அடைவதற்குள் எண்ணெயைத் திருடுவதற்காக உள்ளே நுழைந்து ரயில் எண்ணெய் தாங்கியில் இருந்து எண்ணெய் திருடியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியாவின் பீகார் மாநிலத்தில் விதம் விதமான திருட்டு சம்பவங்கள் அண்மைக்காலமாக இடம்பெற்றுவருகின்றன.

இரும்பு பாலங்களின் பாகங்களை அறுத்து செல்வது, ரயில் இன்ஜின் பாகங்களை கழட்டி செல்லுவதுடன், கடந்த மாதம் தொலைபேசி கோபுரம் ஒன்றை தாம் தான் நிறுவனத்தினர் என கூறி 15 பேர் சேர்ந்து கழட்டி சென்றனர்.

ஏப்ரலில்,  45 ஆண்டுகள் பழமையான இரும்புப் பாலத்தைத் திருடியதற்காக நீர்ப்பாசனத் துறையைச் சேர்ந்த பொறியலாளர் உட்பட எட்டு பேரை பொலிஸார் கைது செய்தமை குறிப்பிடத்தக்கது.