பொதுமக்களுக்கு சம்மாந்துறை பொலிஸாரின் முக்கிய அறிவித்தல்!

 

-சம்மாந்துறை நிருபர்-

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில், அண்மைக்காலமாக வீடுகள் உடைக்கப்பட்டு திருட்டுச் சம்பவங்கள் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகள் அதிகரித்து காணப்படுகிறது.

திருட்டுச் சம்பவங்கள் பெரும்பாலும் வீட்டு உரிமையாளர்கள் வீட்டை விட்டு வெளியேறும் சந்தர்ப்பங்களில் நடைபெறுகிறது.

இதேவேளை, வீட்டு ஜன்னல்களை உடைக்கும் குழுவினர் சம்மாந்துறை பிரதேசத்தில் நடமாடுவதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எனவே, பொதுமக்கள் இச்சந்தர்ப்பத்தில் மிகவும் அவதானமாகவும், விழிப்புடணும் செயற்படுதல் அவசியமாகும்.

சந்தேகத்திற்குரிய வகையில் (குறிப்பாக இரவு வேளையில்) நடமாடுகின்றவர்கள் குறித்து சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்கு தகவல்களை வழங்குமாறு சம்மாந்துறை பொலிஸார் கேட்டுக் கொள்கின்றனர்.