இன்றைய நாள் உங்களுக்கு எப்படி ?

மேஷம்
தொழிலில் மாற்றங்களை கொண்டு வருவதன் மூலம் நல்ல முடிவுகளை பெற முடியும். புதிய திட்டங்கள் மூலம் வெற்றியை ஈட்டுவீர்கள். முதலீடு செய்வதற்கு ஏற்ற நாள். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களிடம் சமூகமாக உறவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

ரிஷபம்
தொழிலில் நீங்கள் நினைத்த காரியங்கள் நடந்தேறும். சில குழப்பங்கள் உண்டாகலாம். அவற்றை நினைத்து கவலை கொள்ள தேவையில்லை. பொருளாதார நிலைமை சீராக இருக்கும்.

மிதுனம்
தடைப்பட்ட காரியங்கள் நடந்தேறும். கடின உழைப்பின் மூலம் வெற்றியை ஈட்டுவீர்கள். பொருளாதார நிலை சீராக இருக்கும். கடன் ஏதேனும் இருந்தால் அதனை அடைத்து விடுவது நல்லது.

கடகம்
சற்று சவாலான நாளாக இருக்கும். தேவையற்ற ஆபத்துக்களை எதிர்கொள்வதை தவிர்க்க வேண்டும். புதிய வேலைகளை துவங்குவதை தள்ளி போடுவது நல்லது. முதல் பாதியில் நிலைமை சற்று மோசமாக இருந்தாலும், நாளின் இரண்டாம் பாதியில் இருந்து உங்களுக்கு சாதகமான விஷயங்கள் நடந்தேறும்.

சிம்மம்
தொழிலில் அதிகம் கவனத்துடன் செயல்பட வேண்டும். உங்களுக்கு வேண்டிய உதவி உங்களை வந்து சேரும். சந்தையில் உங்களின் மதிப்பு எப்போதும் போல உயர்ந்தே காணப்படும்.

கன்னி
தொழிலைப் பொறுத்தவரை பணவரவு நன்றாக இருக்கும். எதிரிகளிடமிருந்து சில பிரச்சனைகள் உண்டாகலாம். கவனமாக இருப்பது நல்லது உங்கள் தொழில் ரகசியங்களை ரகசியமாகவே வைத்துக் கொள்வது நல்லது.

துலாம்
மிகக் கடின உழைப்பை போட்டு வெற்றியை ஈட்ட வேண்டிய அவசியம் உருவாகும். புதிய வேலைகளை துவங்குவதற்கு ஏற்ற நாள். தேவையற்ற மன அழுத்தம் தரக்கூடிய விஷயங்களில் ஈடுபட வேண்டாம் அலுவலகம் செல்வோருக்கு உயர் பதவிகள் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. வேலை பளு அதிகரிக்கும்.

விருச்சிகம்
தொழிலில் சில பிரச்சினைகள் இருக்கும். உங்களது புத்திசாலிதனத்தின் மூலம் பிரச்சினைகளை சரி செய்வீர்கள். முதலீடுகள் செய்வதை தள்ளிப் போடுவது நல்லது. நிறுவனங்களில் பணிபுரியும் நபர்களுக்கு நற்செய்திகள் வந்து சேரும்

தனுசு
தொழிலில் தடைபட்ட காரியங்கள் நடந்து முடியும். முழு முயற்சியுடன் செயல்பட்டு உங்கள் வேலைகளை செய்து முடிப்பீர்கள். அரசாங்க உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சில குழப்பங்கள் உண்டாகலாம். அலுவலக ரீதியாக வெளியிடங்களுக்கு சுற்று பயணம் செல்ல வேண்டிய நிலை ஏற்படலாம்.

மகரம்
தொழிலில் சில மாற்றங்களை கொண்டு வருவதன் மூலம் வெற்றியை ஈட்டுவீர்கள். ஊடகத்துறை, கணினி துறை ஆகியவற்றில் இருப்பவர்களுக்கு கொஞ்சம் கஷ்டமான நாளாக அமையும். நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு வெளிநாடு செல்ல வாய்ப்புகள் உண்டாகும்.

கும்பம்
தொழில் செய்யும் முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய நிலை உருவாகும். கோப்புகள் சம்பந்தப்பட்ட விஷயத்தில் அதிக கவனம் தேவை. அலுவலகத்தில் வேலையில் அதிக கவனம் தேவை.

மீனம்
தொழிலை விருத்தி செய்ய வேண்டிய வாய்ப்புகள் உண்டாகும். சமூகத்தில் மதிப்புக்குரிய ஒருவரின் தொடர்பு கிடைக்கும். உங்கள் திறமைக்காக மற்றவர்கள் உங்களை பாராட்டுவார்கள். புதிய வேலைகளை தொடங்குவதற்கு ஏற்ற நாள்.