Sri Lanka Tamil News Site

தினேஷ் ஷாப்டரின் கொலை : கைரேகை அறிக்கை குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைப்பு

- Advertisement -

உயிரிழந்த வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் உடலில் காணப்பட்ட கைரேகைகளின் அறிக்கை நாளை செவ்வாய்க்கிழமை குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

கார் மற்றும் அவரது உடலில் இருந்து எடுக்கப்பட்ட கைரேகைகள் தற்போது ஆய்வு செய்யப்பட்டு, அவை குற்றப் பதிவுப் பிரிவில் உள்ள குற்றவாளிகளின் கைரேகைகளுடன் பொருத்தப்படும்.

இதேவேளை, தினேஷ் ஷாப்டரின் குடும்ப உறுப்பினர்களின் வாக்குமூலங்கள் எதிர்காலத்தில் பதிவு செய்யப்படும் என குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

- Advertisement -

அதன்படி, அவரது மனைவியிடமும் வாக்குமூலம் பெறப்பட உள்ளது. படுகொலை செய்யப்பட்ட தினேஷ் ஷாப்டரின் இறுதிக் கிரியைகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை பொரளை மயானத்தில் இடம்பெற்றன.

ஜனசக்தி நிறுவனத்தின் இயக்குனரான ஷாஃப்டர், கிரிக்கெட் நிர்வாகி மற்றும் தொழிலதிபர் சந்திரா ஷாஃப்டரின் மகன் ஆவார்.

பொரளை மயானத்தில் கை கால்கள் கட்டப்பட்டு பலத்த காயங்களுடன் கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட வர்த்தகர் தினேஷ் ஷாப்டர், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 15 ஆம் திகதி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

 

- Advertisement -