Sri Lanka Tamil News Site

கஞ்சா பயிரிடல் தொடர்பாக ஜனாதிபதியின் கருத்து : இராஜாங்க அமைச்சர் மகிழ்ச்சி

- Advertisement -

இலங்கையில் கஞ்சாவை வளர்ப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பட்ஜெட்டில் முன்வைக்கப்பட்ட யோசனை குறித்து மிகவும் மகிழ்ச்சியடைவதாக இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்தார்.

ஏற்றுமதிக்காக மட்டுமே கஞ்சாவை பயிரிடுவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாக ஆராய நிபுணர் குழு ஒன்றை நியமிக்க இருப்பதாக ஜனாதிபதி பஜ்ஜெட் உரையில் தெரிவித்திருந்தார்.

அது குறித்து,

- Advertisement -

இந்த மருத்துவ மூலிகையின் மதிப்பை ஜனாதிபதி உணர்ந்திருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். பல வேலை வாய்ப்புகளை வழங்கக்கூடிய தொழில் இது. அதனால்தான் நான் அதை விளம்பரப்படுத்தினேன்.

அடுத்த வருடம் கஞ்சா தோட்டம் மூலம் இரண்டு பில்லியன் டொலர்களுக்கு மேல் பெறுமதியான முதலீடுகளை கொண்டு வர நான் எதிர்பார்க்கிறேன்’ என இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.

‘நான் இந்த முன்மொழிவை முன்பு வைத்தேன்”‘ என்று அவர் நினைவு கூர்ந்தார்.

- Advertisement -