Sri Lanka Tamil News Site

துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது

- Advertisement -

கிளிநொச்சியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை தளபாடங்கள் மற்றும் நாட்டுத் துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டாவளை கோணங்குளம் பகுதியில் வீடு ஒன்றில், கிளிநொச்சி 57 படைப்பிரிவின் கீழ் உள்ள 9 வது சிங்க படைப்பிரிவு விசேட அதிரடிப்படையினர் மற்றும் வன ஜீவராசி திணைக்களம் இணைந்து  சோதனையிட்ட போது, வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இராணுவத் தளபாடங்கள் மற்றும் நாட்டுத் துப்பாக்கிகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

- Advertisement -

புலனாய்வுத் துறையினருக்குக் கிடைத்த தகவலையடுத்தே சந்தேகத்திற்கிடமான வீடு சோதனையிடப்பட்டது.

சோதனையின் போது இடியன் துவக்கு 3, கட்டு துவக்கு 11, இடியன் துவக்கின் மரப்புடிகள் 5, ரீ 56 ரவைகள் 250 உட்பட, 8 கிலோ பன்றி இறைச்சியும் கைப்பற்றப்பட்டது.

சந்தேகத்தினடிப்படையில் 31வயதுடைய நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை தருமபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

- Advertisement -