
லாஃப் எரிவாயுவின் விலை குறைப்பு
லாஃப் எரிவாயுவின் விலை இன்று வியாழக்கிழமை நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் குறைக்கப்பட்டுள்ளதாக லாஃப் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதற்கமைய, 12.5 கிலோகிராம் நிறையுடைய லாஃப் சமையல் எரிவாயுவின் விலை 275 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
இதன்படி அதன் புதிய விலை 3,840 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் 5 கிலோகிராம் நிறையுடைய லாஃப் சமையல் எரிவாயு கொள்கலன் விலை 110 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1,542 ரூபாவாகும்.