போலி நாணயத்தாள்கள் தொடர்பில் பொலிஸார் பொது மக்களுக்கு எச்சரிக்கை

பண்டிகைக் காலத்தில் போலி நாணயத்தாள்கள் புழக்கத்தில் இருப்பது தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினருக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

பணத்தைக் கையாளும் போது போலி நாணயத்தாள்கள் தொடர்பில் பொதுமக்களை விழிப்புடன் செயற்படுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர், எஃப்.யூ. வூட்லர் கோரியுள்ளார்.

பண்டிகைக் காலத்தின் போது, பெரும்பாலும் 5,000 ரூபாய் போலி நாணயத்தாள்களே புழக்கத்தில் இருப்பதாகவும் . முன்னதாகவும், இதுபோன்று நாணயத்தாள்கள் புழக்கத்திலிருந்ததாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்,சுட்டிக்காட்டியுள்ளார்.

போலி நாணயத்தாள்கள் தொடர்பில் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் முறையிடுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர், எஃப்.யூ. வூட்லர் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார்.