
பேருந்து விபத்து: சிறுவர்கள், பெண்கள் உட்பட 37 பேர் காயம்
கண்டியில் நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற பேருந்து விபத்தில் 37 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பேருந்து ஓட்டுநர் உட்பட 9 ஆண்கள், 20 பெண்கள் மற்றும் 8 சிறுவர்கள் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் கண்டி மற்றும் பேராதனை மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குருநாகல், கல்கமுவ மற்றும் எஹெட்டுவெவ ஆகிய இடங்களிலிருந்து யாத்திரைக்காக கண்டி நோக்கி பயணித்த குழுவினரை ஏற்றிச் சென்ற பேருந்தே இவ்வாறு வீதியை விட்டு விலகி சரிவில் விழுந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.
காயமடைந்தவர்களின் நிலை மோசமாக இல்லை எனவும் சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.