வியாபாரம் நஷ்டமடைந்தமையால் உரிமையாளர் உயிரிழப்பு!

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணத்தில் புகைப்பட நிறுவனம் ஒன்று நஷ்டமடைந்தமையால் அதன் உரிமையாளர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளளார்.

கோண்டாவில் வடக்கு-கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த புலவர் ரமேஷ்குமார் (வயது 43) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் நேற்று திங்கட்கிழமை மரணச் சடங்கு ஒன்றிற்கு சென்றுவிட்டு இரவு 10.30 மணிக்கு வீடு திரும்பியவர், வீட்டின் மேல்மாடிக்கு சென்று தனிமையில் இருந்துள்ளார்.

இந்நிலையில், அவரது மனைவி இரவு 11 மணியளவில் உணவு கொண்டு சென்ற வேளை அவர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.

பின்னர் அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை, அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்