பாடசாலை பேருந்து மோதிய விபத்தில் ஒருவர் பலி!

பாடசாலைப் பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

அனுராதபுரம் வலிசிங்க ஹரிச்சந்திர மாவத்தையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக, அநுராதபுர தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவர் அனுராதபுரம், இசுரு புரவில் வசிக்கும், விலங்கு அபிவிருத்தி ஆலோசகர் சம்பத் வடுகே (56 வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

விபத்தில் உயிரிழந்தவரின் மகள் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ் விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.