யாழில் பால் குடித்துவிட்டு உறங்கிய மூன்று மாதங்கள் நிரம்பிய பெண் குழந்தை திடீரென உயிரிழந்தமை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. கோப்பாய் மத்தி, அம்மன் கோவில் வீதி பகுதியை சேர்ந்த கஜேந்திரன் கர்ஷா என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த குழந்தையின் தாயார் நேற்று அதிகாலை 3 மணியளவில் பாலூட்டியுள்ளார். அதன்பின்னர் காலை 6 மணியளவில் குழந்தையை பார்த்தவேளை மூக்கினால் பால் வெளிவந்த நிலையில், குழந்தை விறைத்து காணப்பட்டுள்ளது.
இதன்போது குழந்தையை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை, குறித்த குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். குழந்தை நிமோனியா காரணமாக உயிரிழந்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.