ஆங்கில தின போட்டிக்கு சென்றுகொண்டிருந்த மாணவியும் அவரது தாயாரும் ஏ9 வீதியில் விபத்து!

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இத்தாவில் பகுதியில் டிப்பர் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி இருவர் படுகாயம்!
கிளிநொச்சி மாவட்ட பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இத்தாவில் பகுதியில்  ஏ9 வீதியில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
யாழ் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த தாயும்  மகளும் இத்தாவில் பாடசாலை ஒன்றிற்கு திரும்ப முற்பட்ட வேளை எதிரே வந்த டிப்பர் வாகனம்  அவர்களை மோதியுள்ளது.
காயமடைந்தவர்கள் அங்கிருந்த இளைஞர்களால் பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
ஆங்கில தின போட்டியில் கலந்து கொள்வதற்காக சென்று கொண்டிருந்த பாடசாலை மாணவியும் அவரது தாயாருமே இவ்வாறு படுகாயமடைந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்