
பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தனது 13 வயது மகளுக்கு செய்த மோசமான செயல்
மனைவியைத் தாக்கி தனது பதின்மூன்று வயது மகளை துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் நேற்று புதன்கிழமை அனுராதபுரம் பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கான்ஸ்டபிளின் மனைவி கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்ட நிலையில் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் அனுராதபுரத்தில் வசிக்கும் 38 வயதுடையவர்.
சந்தேக நபர் அனுராதபுரம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
