புத்தளம் – முதுகடுவ பகுதியில் லொறி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் காயமடைந்த 10 பேர் மாரவில ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாரவில தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பில் இடம்பெற்ற வெசாக் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டு ஆனமடுவவிற்கு திரும்பிக் கொண்டிருந்த போதே இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
விபத்தில் மூன்று குழந்தைகள் உட்பட பத்து பேர் காயமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.