11 மாத குழந்தை சடலமாக மீட்பு

இந்தியாவில் சென்னையில் பெண் குழந்தையொன்று நேற்று வியாழக்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

சோலையூரைச் சேர்ந்த 11 மாத பெண் குழந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

29ஆம் திகதி இரவு வீட்டின் கதவை திறந்துவிட்டு தூங்கியதாகவும், தங்களுடன் படுத்திருந்த குழந்தை காலையில் காணாததால் தேடியபொழுது தண்ணீர் வாளியில் இருந்ததாகவும், உயிரிழந்த குழந்தையின் பெற்றோர் கூறியதாக பொலிஸார் தெரிவித்தனர்

மேலும் இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்