வெசாக் தினத்தை முன்னிட்டு சிறைச்சாலை கைதிகளை பார்வையிடுவதற்கு உறவினர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாளை திங்கட்கிழமை மற்றும் நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை ஆகிய இரு தினங்களும் இதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி ஒவ்வொரு கைதிக்கும் உறவினர்களால் கொண்டு வரப்படும் உணவுப் பொதிகள், இனிப்புக்கள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் ஆகியவற்றை வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைய இந்த பார்வையாளர்கள் சந்திப்பு இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.