-பதுளை நிருபர்-
பதுளை பண்டாரவளை பிரதான வீதியின் ஹாலிஎல உடுவர பகுதியில் இன்று திங்கட்கிழமை கார் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தினால் வீதியோரத்தில் இருந்த பெட்டிக்கடை ஒன்றும் சேதமடைந்துள்ளதுடன், எவருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஹாலிஎல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

