வாகன விபத்து: 28 பேர் படுகாயம்

இந்தியாவில் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே இடம்பெற்ற வாகன விபத்தில் 28 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 15 பேர் சென்ற வேன் விளாத்திக்குளம் சாலையில் உள்ள வலைவில் திரும்பும்போது எதிரே பக்தர்கள் வந்த வேன்மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

விபத்தில் படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்