யாழ். செம்மணி சந்தியில் இன்று புதன் கிழமை மோட்டார் சைக்கிளும் பட்டா வாகனமும் மோதி விபத்து சம்பவித்துள்ளது.
இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் படுகாயமடைந்த நிலையில் அவர்கள் இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்த விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.