மோட்டார் சைக்கிள் மோதி ஒருவர் பலி

வவுனியா, செட்டிக்குளம் – பூவரசன்குளம் வீதியில் தட்டான்குளம் சந்தியில் மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வளைவு வீதியில் திரும்பிய மோட்டார் சைக்கிள் எதிரே பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மேலதிக சிகிச்சைக்காக வவுனியா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

செட்டிகுளம் பொலிஸார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க