உலகின் மிகவும் பிரபலமான கணினி இயக்க முறைமை நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாப்ட் நிறுவனம், அதில் பணிபுரியும் ஊழியர்களில் 6,000 பேரை பணிநீக்கம் செய்ய தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த விடயம் தொடர்பில் நேற்று செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.
மைக்ரோசாப்ட் செலவுகளைக் கட்டுப்படுத்தவும், செயற்கை நுண்ணறிவில் பில்லியன் கணக்கான டொலர்களை முதலீடு செய்யவும் எதிர்ப்பார்த்துள்ளதால், மைக்ரோசாப்ட் நிறுவனம் 6,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.