
முகமாலையில் கடை மீது பெற்றோல் குண்டு தாக்குதல்
கிளிநொச்சி – முகமாலை வடக்கு ஏ- 9 வீதியில் வியாபார நிலைய கடை மீது இனம் தெரியாத நபர்களால் நேற்று புதன் கிழமை நள்ளிரவு பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த கடையின் மீது 2020 ஆண்டில் கழிவு எண்ணை வீசப்பட்டதுடன் 2021ஆம் ஆண்டில் மூகமூடி அணிந்த மோட்டார் சைக்கிளில் சென்ற இரண்டு நபர்களால் இரும்புக்கம்பி கொண்டு கடையின் சொத்துக்கள் அடித்து உடைக்கப்பட்டதுடன் சந்தேக நபர்களும் தப்பிச் சென்றனர்.
இந்நிலையில் நேற்று இரவு மூன்றாவது தடவையாக குறித்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் பளை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.