முகத்தில் உள்ள முடியை நிரந்தரமாக நீக்க

முகத்தில் உள்ள முடியை நிரந்தரமாக நீக்க

முகத்தில் உள்ள முடியை நிரந்தரமாக நீக்க

⚫பெண்கள் தங்கள் அழகை அதிகரிக்க நிறைய முயற்சிகளை மேற்கொள்கின்றனர். அவற்றில் மிக முக்கியமான ஒரு விஷயம் சருமத்தில் உள்ள தேவையற்ற முடிகளை அகற்றுவது. இது பலருக்கும் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்று.

⚫அதற்காக நாம் செய்யாத காரியங்கள் இல்லை. ஆனாலும், அதற்கான நிரந்தர தீர்வு நமக்கு கிடைப்பதில்லை. தேவையற்ற முடிகள் என்றால், பெண்களின் கை – கால்கள், முகத்தில் உள்ள முடிகளை தேவையற்ற முடிகள் என அழைக்கிறோம். இந்த தேவையற்ற முடிகளை நிரந்தரமாக அகற்ற உதவும் வழிகள் என்ன என்பதைத் தெரிந்து கொள்வோம்.

🔸முகத்தில் இருக்கும் தேவையற்ற முடியை நிரந்தரமாக நீக்க வாழைப்பழத்தை மசித்து அதனுடன் தேன் சேர்த்து மிக்ஸ் செய்து முகத்தில் தடவும். இப்படி வாரம் 2முறை செய்து வந்தால் முகத்தில் முடி வளருவது நின்று விடும்.

🔸சிறிதளவு சர்க்கரையுடன், எலுமிச்சை சாறு மற்றும் தண்ணீர் ஆகியவற்றை ஒன்றாக கலந்து, கலவையாக தயார் செய்து கொள்ளவும். இந்த கலவையை முகத்தில் இருக்கும் ரோமங்கள் மீது தடவி 5 நிமிடம் மசாஜ் செய்யவும். பின்பு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும். இந்த முறையை வாரத்தில் இரண்டு முறை செய்து வந்தால் முகத்தில் வளரும் முடியின் வளர்ச்சியை தடுக்கலாம்.

🔸சிறிதளவு கஸ்தூரி மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு பால் ஆகியவற்றை ஒன்றாக கலந்து சருமத்தில் இருக்கும் ரோமங்கள் மீது தடவி, சிறிது நேரம் கழித்து, முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இந்த முறையை வாரத்தில் இரண்டு முறை செய்து வர சருமத்தில் இருக்கும் தேவையற்ற ரோமங்கள் நீங்கி விடும் முகத்திற்கும் மிகவும் நல்லது.

🔸சிறிதளவு கடலை மாவு, தேவையான அளவு மஞ்சள் தூள் மற்றும் சிறிதளவு கடுகு எண்ணெய் ஆகியவற்றை ஒன்றாக கலந்து, ஒரு பேஸ்ட்டு போல் தயாரித்து கொள்ளவும். பின்பு முகத்தில் இருக்கும் ரோமங்களின் மீது தடவி சிறிது நேரம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் நன்கு தேய்த்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதினாலும் கூட முகத்தில் இருக்கும் தேவையற்ற முடிகள் உதிர்ந்து விடும்.

🔸கற்றாழை ஜெல்லில் மஞ்சளை கலந்து பேஸ்ட் தயார் செய்யவும். இந்த பேஸ்டை முகத்தில் தேவையற்ற முடி வளர்ந்த பகுதிகளில் தடவவும். பேஸ்ட் காய்ந்ததும் சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவவும். தொடர்ந்து பயன்படுத்தினால், முடி வளர்ச்சி குறையும்.

🔸சிறிதளவு கோதுமை மாவினை எடுத்து முடி வளர்ச்சிக்கு எதிர்த்திசையில் ரப் செய்வதினால் மெது மெதுவாக முடி உதிர்தலை ஊக்குவித்து முடி வளர்ச்சியைத் தடுக்கலாம். பப்பாளியில் இயற்கையாக முடியை அகற்றும் என்சைம்கள் உள்ளன. எனவே பப்பாளியைத் தவறாமல் உங்கள் சருமத்தில் முடி உள்ள இடத்தில் உபயோகிப்பதால் முடிகள் அகன்று விடும். ஆனால் இதற்கு நாட்கள் ஆனாலும் வெகு நாட்களுக்கு முடி வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும்.

🔸நன்கு பழுத்த வாழைப்பழ திப்பையுடன் சம அளவு ஓட்ஸ் பொடி சேர்த்து பேஸ்ட் போல் தயார் செய்யவும். பின் இந்த சேர்மத்தை தேவையற்ற முடிகளின் மீது தடவி, 25 நிமிடங்களுக்கு உலர விட்டு பின்னர் சுத்தம் செய்துவிட நல்ல பலன் கிடைக்கும்.

முகத்தில் உள்ள முடியை நிரந்தரமாக நீக்க

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்