மின்சாரத்தில் இயங்கக் கூடிய மோட்டார் படகுகள் அடுத்த வருடம் முதல் அறிமுகம் – டக்ளஸ் தெரிவிப்பு

கடற்றொழிலாளர்களுக்கு, மின்சாரத்தில் இயங்கக் கூடிய மோட்டார் படகுகளை அடுத்த வருடம்முதல் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

மீனவர்கள் எதிர்கொள்ளும் எரிபொருள் பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் வகையில் சிறிய அளவில் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களுக்கு பற்றரியில் இயங்கக்கூடிய, மின்சார மோட்டார் படகை அறிமுகப்படுத்த எதிர்பார்த்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

இவை 100 கிலோமீற்றர் தூரம் பயணிக்கக் கூடியவை எனவும் இதற்காக நாளொன்றுக்கு 86 ரூபா மாத்திரமே செலவு ஏற்படும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.