பலாங்கொடை ஹல்பே பகுதியில் ஒருவர் மரம் வெட்டிக் கொண்டிருந்தபோது அது அவர்மேல் விழுந்ததால் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சமனல ஏரி பொலிஸ் எல்லைக்குட்பட்ட ஹல்பே பகுதியைச் சேர்ந்த ஒய்.ஜி.தர்மதாச (வயது – 61) என்பவரே இவ்வாறு உயிர் இழந்துள்ளார்.
மரத்தை வெட்டி அதனை இழுத்தபோது மரம் உடலில் விழுந்ததால் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்