மனித உரிமைகள் பேரவையிலிருந்து விலகிய அமெரிக்கா
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலிருந்து அமெரிக்கா விலகுவதற்கான உத்தரவில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று செவ்வாய்க்கிழமை கைச்சாத்திட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் குறித்த உத்தரவினூடாக பாலஸ்தீன ஏதிலிகளுக்கான நிவாரணப் பணிகளை முன்னெடுத்துவரும் ஐக்கிய நாடுகளின் முகவரகத்துக்கு தொடர்ந்தும் அமெரிக்காவினால் நிதியுதவி வழங்கப்படமாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.