மட்டக்களப்பு கிரான்குளம் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பழங்களுடன் பயணித்த டிப்பர் வண்டி வீதியில் கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.
காத்தான்குடி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட கிரான்குளம் சீமூன் ஹோட்டலுக்கு அருகாமையில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் இந்த விபத்து பதிவாகியுள்ளது.
எம்பிலிப்பிட்டியவில் இருந்து பழங்களுடன் சம்மாந்துறை நோக்கி பயணித்த டிப்பர் வண்டியே இயந்திரக் கோளாறு காரணமாக வீதியை விட்டு விலகி குடைசாய்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.
விபத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை வாகனம் பாரியளவான சேதமடைந்துள்ளது.