மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில்இ சட்ட விரோத மதுபானம் வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞன் நேற்று புதன் கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொக்கட்டிச்சோலை பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞனே இதன் போது கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடம் இருந்து 37.5 லீற்றர் சட்ட விரோத மதுபானம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.
இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.