கொழும்பு – கொஸ்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இந்துருவ பிரதேசத்தில், நேற்று புதன் கிழமை ஹஷிஷ் போதைப்பொருள் வைத்திருந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்துருவ பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய நபரே இதன் போது கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடம் இருந்துஇ 53 கிராம் 610 கிராம் ஹஷிஷ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக கொஸ்கொடை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஸ்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.