பேருந்து – மோட்டார் சைக்கிள் விபத்து: ஒருவர் பலி – ஒருவர் படுகாயம்

புத்தளம் சிரம்பியடி பகுதியில் பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கருவலகஸ்வெவ, மதவாச்சி பிரதேசத்தை சேர்ந்த கருவலகஸ்வெவ எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பணிபுரிந்த 21 வயதுடைய அவிஷ்க ரசாஞ்சன என்பவரே குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் உயிரிழந்த இளைஞனும் மற்றுமொரு இளைஞனும் கருவலகஸ்வெவயிலிருந்து புத்தளம் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த போது சிரம்பியடிய பிரதேசத்தில் வீதியின் மறுபுறத்தில் அனுராதபுரத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து ஒன்று மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக புத்தளம் தலைமையக பொலிஸ் பிரிவின் போக்குவரத்து பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்