-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் – இளவாலை பொலிஸ் பிரிவிலுள்ள உயரப்புலம் பகுதியில் தனது பிள்ளைக்கு உணவில் கிருமிநாசினியை கலந்து ஊட்டிய தந்தை தலைமறைவாகியுள்ள நிலையில் பிள்ளை தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகிறது.
6 வயதான பிள்ளை உணவு உட்கொண்ட பின் வாயிலிருந்து நுரை வெளியேறியது. குடும்பத்தினர் பிள்ளையை உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். உணவில் கிருமிநாசினி கலந்து ஊட்டியதாலேயே பிள்ளை பாதிக்கப்பட்டது தெரியவந்தது.
பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்த நிலையில் உணவு ஊட்டிய தந்தை வீட்டை விட்டு தலைமறைவாகியுள்ளார்.
மேலும் அவரை கைது செய்ய இளவாலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.