பெரகல – வெல்லவாய வீதியில் விபத்து : ஒருவர் படுகாயம்
பெரகல – வெல்லவாய வீதியில் ஏற்பட்ட வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
முச்சக்கரவண்டியொன்று பேருந்தை முந்திச்செல்ல முற்பட்டபோதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கர வண்டியின் சாரதி ஹல்துமுல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக தியத்தலாவ ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹப்புத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.